2 February 2013

நாம் வாழ்ந்த கிராமம்



மாடுகள் மந்தைக்கு போவதும், மனிதர்கள் சந்தைக்கு போவதும் நிகழ்வதில்லை; கம்பும், கரும்பும் விளைந்த செவக்காட்டில் காற்றாலைகள் மட்டுமே கையசைக்கிறது;உழைக்கப் போகிறவர்கள் களைத்துத் திரும்புகிற சாயங்காலங்கள் இப்போது இல்லை; பொறணி பேசவாவது அந்தியில் கூடுகிற கூட்டம், கதவை சாத்தி விட்டு நாடகம் பார்க்கிறது;வந்து போகிறவர்கள் வாழ்கிறவர்கள் என பிளந்து கிடக்கிறது தார்ச் சாலைகள்;அதிகாலையில் காடு, அந்தியில் வீடு என்றுழைத்த என் சொந்தங்கள் குளத்துக் கரையில் கூடிப்பேசுகிற நிகழ்விற்கு யாரோ “100 நாள் வேலைதிட்டம்” என பெயர் வைத்திருக்கிறார்கள்; இப்படித்தான் இருக்கிறது நாம் வாழ்ந்த கிராமம் இன்று!!

No comments:

Post a Comment