பசிக்கான உணவு; தேடலுக்கான
கல்வி
உரிமைக்கு உலை
வைக்காத அரசியல்
விலை பேசி விடாத
வளர்ச்சி
சாதியில்லா
சமூகம்; இருட்டிலிருந்து வெளிச்சம்;
விளைச்சலுக்கு
தண்ணீர் – என
அத்தனைக்கும்
போராடுகிற தேசத்திலிருந்து
தேசத்திற்காய்
போராடிய உங்களுக்கு
உதவாமல் போனது
எங்களின் இயலாமை தான்
ஆனாலும்
செத்துப்போனது முத்துக்குமார் மட்டுமல்ல
நாங்களும் தான்..
இப்போது நடைபிணங்கள் அவ்வளவே...