நீ கிழித்துவிட்டுப் போனதாய் சொல்லப்படுகிற
என் வாழ்வின் சில பக்கங்களை உன் நினைவுகளால்
இட்டு நிரப்புவதே என் சமீபகால எழுத்தின் நோக்கமாய் இருக்க,
இதையும் கூட கிழிந்த பக்கங்களென சொல்லிவிடக்கூடும் சிலர் – எனில்
எது செய்தும் ஏற்றுக்கொள்ள முடியாத
மூன்றாம் தர புத்தகமாய் இருப்பதை விட,
சில சமரசங்களோடு ஒட்டிவிட முடிகிற
கிழிந்த புத்தகமாய் இருந்து விட்டுப் போகட்டும் என் வாழ்வு!!!!
No comments:
Post a Comment