21 January 2013

நீ கற்றுக்கொடுத்த அடிப்படைகள்


சிறு வயதில் உன் கை விரல் பிடித்து, களை எடுக்க சென்ற கால்சட்டை வயது நினைவுகளை அழித்துவிடுகிற வலிமை புதிதாய் முளைத்திருக்கும் தார்ச் சாலைகளுக்கு இல்லை.. அம்மா... நான் தடுமாறும்போது தலை கோதி விடுகிற தூரத்தில் நீ இப்போது இல்லை தான் ஆனாலும் நீ கற்றுக்கொடுத்த அடிப்படைகளில் தான் கட்டியெழுப்புகிறேன் எனக்கான இந்த வாழ்க்கையை... இது எப்போதும் உடைந்து விடாது என்கிற நம்பிக்கையின் ஊடாகவே பயணிக்கிறது என் ஒவ்வொரு நாளும்!!!

No comments:

Post a Comment