23 October 2012

தொலைந்து போனது ஒரு காலம்


அகல விழிகள், ஓரப் பார்வை என வசீகரமாய் இருந்தாய், நம் கவிதைகளுக்கான கருத்துக்களை முதன்முதலாய் பரிமாறிக்கொண்ட போது....

அடுத்தடுத்து பேச வாய்ப்புகள் வந்த போது தவிர்த்திருக்கிறேன்!! அதையும் மீறி பேச ஆரம்பித்தபோது வியர்த்திருக்கிறேன்!!........

ஒரு நாளின் பாதி நேரம் கல்லூரி, மீதி நேரம் அதன் நினைவுகள் என நான் மட்டுமே நிறைந்திருந்ததாய் ஓர் உணர்வு....

நீ யாரையோ பார்க்கிற எல்லா நேரமும் நான் உன்னையும், நீ என்னைப் பார்க்கிற சில நேரம் யாரையோ என பார்த்து, கரைந்து, தொலைந்து போனது ஒரு காலம்....

No comments:

Post a Comment